The News Sponsor By
feature-top
feature-top

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டுப்பகுதியில் இருந்து சல்லிக்கல்லு ஏற்றும் டிப்பரில் அதிகளவான பாலை மரக்குற்றிகளை ஏற்றி கடத்திச் செல்லமுற்பட்டவர் புதுக்குடியிருப்பு பொலீசாரல் கைது செய்யப்பட்டுள்ளார்..

நேற்று காலை உடையார் கட்டு தெற்கு பகுதியில் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான அறுத்த பாலை மரக்குற்றிகளை டிப்பரில் ஏற்றி அதன் மேல் சல்லிக்கல்லுகள் ஏற்றப்பட்டு கடத்தப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலை குழு ஒன்று சென்று குறித்த டிப்பரை பிடித்துள்ளதுடன் சாரதியினையும் கைது செய்துள்ளார்கள்..

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இவ்வாறான கடத்தல் சம்பவம் இடம்பெற்று வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விசுவமடு பகுதியினை சேர்ந்த டிப்பரின் சாரதி கைது செய்யப்பட்டு பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் டிப்பரும், மரக்குற்றிகளும் , சல்லிக்கல்லுகளும் பொலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்த புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் இன்று  நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.  

feature-top
feature-top