The News Sponsor By
feature-top
feature-top

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் செயல்படும் அமெரிக்க தூதரகத்தை குறி வைத்து 4 ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஈராக் பாதுகாப்புத்தறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் மூன்று ஏவுகணைகள் அமெரிக்க தூதரகத்தின் எல்லைக்குள் விழுந்ததாகவும், மற்றொன்று அருகில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் உள்ள பாடசாலையை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

பாக்தாத்தின் டோரா பகுதியில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் ஆதரவு போராளிகள் அமைப்பு இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் அதேவேளை, அமெரிக்க படைகள் ஈராக்கில் இருந்து முழுமையாக வெளியேறினால் மட்டுமே இது போன்ற தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றும்  அறிவித்துள்ளது.  

feature-top
feature-top