The News Sponsor By
feature-top
feature-top

உலக அரங்கில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தன்னை தானே அவமானப்படுத்தி வருவதாக பிரித்தானியாவின் வெளிவிவகார துறை செயலாளர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.

G7 நாட்டு வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர ரஷ்யாவிற்கு எதிராக மேலும் கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அவர், இறுதி ரஷ்ய இராணுவம் யுக்ரைனை விட்டு வெளியேறும் வரை பொருளாதார தடை தொடர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய படையணியொன்று கிழக்கு யுக்ரைனில் உள்ள ஆற்றினை கடக்க மேற்கொண்ட முயற்சி முற்றாக தோல்வியடைந்துள்ளதுடன், கவசவாகனங்கள் உட்பட முழு இராணுவ தளபாடங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய தெரிவித்துள்ளது.

feature-top
feature-top