The News Sponsor By
feature-top
feature-top

யுக்ரைனில் இருந்து 60 இலட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறியுள்ளனர் என ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த மாசி மாதம் 24 ஆம் திகதி யுக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, தற்போது வரையில், 60 இலட்சத்து 29 ஆயிரத்து 705 பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.

அவர்களில் 90 சதவீதமானோர் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர் என ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேநேரம், 18 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட ஆண்கள், இராணுவ நடவடிக்கைக்காக நாட்டிலிருந்து வெளியேற முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

feature-top
feature-top