

இந்தியாவின் மேற்கு டெல்லியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில், நேற்று மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்த தோடு 40 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், 60 முதல் 70 பேர் வரை குறித்த கட்டடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேற்கு டெல்லியான முண்டக் பகுதியின் புகையிரத நிலையத்திற்கு அருகே உள்ள ஒரு வணிக வளாக கட்டடத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தை அடுத்து ஏற்பட்ட இந்தத் தீ பரவலைக் கட்டுப்படுத்த சுமார் 24 தீயணைப்பு குழுவினர் நடவடிக்கை எடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டடத்தின் முதலாம் மாடியில் உள்ள சிசிடிவி கமரா மற்றும் ரவுட்டர் தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்து தீப்பரவவியதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
எனினும், தீப்பரவலுக்கான உறுதியான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.





அரச பணியாளர்களுக்கு இன்று விடுமுறை.
அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் பணியாளர்கள் தவிர்ந்த ஏனைய அரச பணியா
- Thedipaar
- Business Directory
- Event
- Epaper
- Ebook
- Register
- Registration
- Priceplan
- About us
- Contact Us
- Anuthaapam
- Lifetime Notice
- Rememberance
- Maveeran
- Post Obituary
- Quick Links
- Thedipaar Tv
- Thedipaar Fm
- Event
- Arist
- Classified
- Post
- Sell
- Buy
- Advertisement
- Advertisement
- Bulk Sms
- Bulk Call
- Bulk Mail
- Registration