

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கொல்லப்பட்ட பெண் ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லாவின், இறுதிச் சடங்கில் இஸ்ரேலிய பொலிஸார் துக்கத்தில் கலந்து கொண்டவர்களை தாக்கியுள்ளனர்.
பொலிஸார், சிலர் தடியடிகளைப் பயன்படுத்தி, பாலஸ்தீனியர்களின் கூட்டத்திற்குள் நுழைந்ததால், பெண் ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லாவை வைத்திருந்த பெட்டியுடன் மக்கள் நிலைகுலைந்துள்ளனர்.
பொலிஸாருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மருத்துவமனை வளாகத்தில் பிரேதப் பெட்டியை சுற்றி திரண்டிருந்த மக்கள், அபு அக்லாவுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.
அதிகாரிகள் கூட்டத்தை பின்னுக்குத் தள்ளுவதற்கு முன்பு, அங்கு பதற்றம் ஏற்பட்டிருந்தது.
நேற்று முன் தினம் பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் வளாகத்தில் ஒரு இறுதிச் சடங்கில் அவரது பிரேதப் பெட்டி பாலஸ்தீனியக் கொடியால் மூடப்பட்டிருந்தது.
அவர் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேலே முழுப் பொறுப்பு என்றும், போர்க் குற்றங்களை விசாரிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை பரிந்துரைப்பதாகவும் பாலஸ்தீனிய ஜனாதிபதி கூறினார்.
அபு அக்லா கடந்த புதன்கிழமை அதிகாலையில் ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேலிய தாக்குதல் குறித்து அறிக்கை அளித்தார். அப்போது, பெண் ஊடகவியலாளர் அபு அக்லா சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.





எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சிற்றுண்டி வியாபாரிகள் பாதிப்பு.
நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மன்னார் ம
- Thedipaar
- Business Directory
- Event
- Epaper
- Ebook
- Register
- Registration
- Priceplan
- About us
- Contact Us
- Anuthaapam
- Lifetime Notice
- Rememberance
- Maveeran
- Post Obituary
- Quick Links
- Thedipaar Tv
- Thedipaar Fm
- Event
- Arist
- Classified
- Post
- Sell
- Buy
- Advertisement
- Advertisement
- Bulk Sms
- Bulk Call
- Bulk Mail
- Registration