The News Sponsor By
feature-top
feature-top

இலங்கையின் சிறுபோக பயிர்ச் செய்கைக்காக, 65,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஒரு பில்லியன் டொலர் கடன் வசதியின் கீழ், இந்த உரம் வழங்கப்படவுள்ளது.

இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய உரத் திணைக்களத்தின் செயலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் சதுர்வேதியை  சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, இந்தியாவின் தீர்மானம் அறிவிக்கப்பட்டதாக இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.  

நேபாளத்திற்கு அடுத்தபடியாக உரம் வழங்குவதற்கான இந்தியாவின் உத்தரவாதத்தைப் பெற்ற இரண்டாவது நாடு இலங்கையாகும். என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

feature-top
feature-top