

தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் 2011ம் ஆண்டு ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
மேலும் அந்த தொடரே அவருக்கு பெரிய ரீச் கொடுக்க அதன்பிறகு 2013ம் ஆண்டு சரவணன் மீனாட்சி 2வில் நடித்திருந்தார். அந்த சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றார். பெங்களுரைத் சேர்ந்த நடிகை ரச்சித்தா பார்ப்பதற்கு மாநிறமாக இருந்தாலும் இவரது அழகாலும் திறமையான நடிப்பாலும் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். நடிகை ரச்சிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடன் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் ஜீ தொலைக்காட்சியில் நாச்சியார் என்ற சீரியலில் நடித்தார். ஆனால், அந்த சீரியல் கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது, கலர்ஸ் தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகி வரும், இது சொல்ல மறந்த கதை சீரியலில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும், விதவைப் பெண்ணாக நடித்து வருகிறார்.
ரச்சித்தா கணவனை விட்டு பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நேரத்தில், பேட்டி அளித்த ரச்சித்தா, இது சொல்ல மறந்த கதை சீரியலில் வரும் கதாபாத்திரமும் தனது வாழ்க்கையும் ஒன்று என்றும், தான் தற்போது தனிமையில் இருப்பதாகவும், கதாபாத்திரத்தில் அந்த பெண்ணுக்கு இருக்கும் தைரியமும், அந்தந்த சூழ்நிலை சமாளிக்கும் முதிர்ச்சியும் தனக்கு இருப்பதாக ரச்சிதா கூறியிருந்தார். இந்த பேட்டிக்கு பின்பே அவர் உண்மையில் கணவரை பிரிந்து இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இதையடுத்து, தற்போது நடிகை ரச்சித்தா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஒரு செய்தி இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.





ஆப்கன் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 1,150ஆக அதிகரிப்பு!
ஆப்கானிஸ்தானில் கடந்த 22ம் தேதி அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத
- Thedipaar
- Business Directory
- Event
- Epaper
- Ebook
- Register
- Registration
- Priceplan
- About us
- Contact Us
- Anuthaapam
- Lifetime Notice
- Rememberance
- Maveeran
- Post Obituary
- Quick Links
- Thedipaar Tv
- Thedipaar Fm
- Event
- Arist
- Classified
- Post
- Sell
- Buy
- Advertisement
- Advertisement
- Bulk Sms
- Bulk Call
- Bulk Mail
- Registration