The News Sponsor By
feature-top
feature-top

கனடாவில் விற்பனை செய்யப்படும் சில வகை பால் மாவினால் பாதிப்பு குறித்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதில் நுண்ணுயிர்களின் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  சல்மன்லா வகை பக்டீரியாக்கள் மற்றும் க்ரோனோ பெக்டர் என்னும் நூண்ணுயிர்கள் என்பனவற்றினால்  பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 17ம் திகதி விடுக்கப்பட்ட எச்சரிக்கையின் அடிப்படையில் சந்தையிலிருந்து இந்த வகை பால் மா பக்கட்டுக்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டன.

எனினும் சில பக்கட்டுகள் இணைய வழியில் தவறுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

• 964-gram containers of Similac Advance Step 1 Milk-Based Iron-Fortified Infant Formula Powder.

• 964-gram containers of Similac Advance Step 2 Milk-Based Iron-Fortified and Calcium-Enriched Infant Formula Powder.

• 400-gram containers of Similac Alimentum Step 1 Hypoallergenic Infant Formula Powder

• 658-gram containers of Similac Advance Step 2 Milk-Based Iron-Fortified and Calcium-Enriched Infant Formula Powder. ஆகியவை சந்தையிலிருந்து மீள கோரப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தியவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்றுக்கொள்வது அவசியம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

feature-top
feature-top