The News Sponsor By
feature-top
feature-top

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், 280-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு கோஸ்ட் நகருக்கு அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.1-ஆக பதிவாகியுள்ளது. கோஸ்ட் நகரிலிருந்து 44 கி.மீ தொலைவில் சுமார் 51 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்(யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளது. 

சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால், பக்டிகா மாகாணத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பதாகவும், 250-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் மொத்தமாக 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

feature-top
feature-top