

9 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது பெண்கள் புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இந்த போட்டியில் ஏற்கனவே அர்ஜென்டினா அணி (42 புள்ளிகள்) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி விட்டது. இந்திய அணி 24 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. இந்த போட்டி தொடரில் இந்திய அணி தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது.
இந்தியா-அமெரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டாமில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்தது. இந்திய தரப்பில் தீப் கிரேஸ், நவ்னீத் கவுர், சோனிகா, வந்தனா ஆகியோர் கோல் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 27 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்தது. அமெரிக்கா 5 புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது. இந்திய அணி தனது கடைசி லீக்கில் அமெரிக்காவை இன்று (இரவு 8 மணி) மீண்டும் இதே மைதானத்தில் சந்திக்கிறது.





முல்லைத்தீவில் மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவிகள் பாலியல் துஸ்பிரயோகம்; ச
Read more
- Thedipaar
- Business Directory
- Event
- Epaper
- Ebook
- Register
- Registration
- Priceplan
- About us
- Contact Us
- Anuthaapam
- Lifetime Notice
- Rememberance
- Maveeran
- Post Obituary
- Quick Links
- Thedipaar Tv
- Thedipaar Fm
- Event
- Arist
- Classified
- Post
- Sell
- Buy
- Advertisement
- Advertisement
- Bulk Sms
- Bulk Call
- Bulk Mail
- Registration