

இந்திய தேசிய தடகள சம்மேளனம் சார்பில் தேசிய முதியோர் தடகள போட்டிகள் குஜராத் மாநிலம் வதேதரா நகரில் நடந்தது. இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அரியானாவை சேர்ந்த 105 வயது பாட்டி ராம்பாய் புதிய சாதனை படைத்தார். அவர் 45.40 வினாடிகளில் பந்தய தூரத்தை ஓடி கடந்தார்.
இதுபோல கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் ஒரு நிமிடம் 52.17 வினாடிகளில் ஓடி சாதனை படைத்தார். 105 வயதில் தேசிய போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்த பாட்டி ராம்பாய்க்கு மைதானத்தில் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
சாதனை படைத்த பாட்டி ராம்பாய் கூறும்போது, எனது அடுத்த இலக்கு சர்வதேச போட்டியில் பங்கேற்பது. அதிலும் சாதனை படைத்து வெற்றி பெறுவேன். இதற்கான பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவேன், என்றார். அவரிடம் இந்த வயதில் சாதனை படைத்த நீங்கள், இளம்வயதில் தடகள போட்டிகளில் பங்கேற்காதது ஏன்? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு சிரித்தபடி பதில் அளித்த அவர் அந்த வயதில் என்னை யாரும் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்றார்.





ராகுல் காந்தி அலுவலகத்தில் தீடீர் தாக்குதல்!
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தில் இந்திய மாணவ
- Thedipaar
- Business Directory
- Event
- Epaper
- Ebook
- Register
- Registration
- Priceplan
- About us
- Contact Us
- Anuthaapam
- Lifetime Notice
- Rememberance
- Maveeran
- Post Obituary
- Quick Links
- Thedipaar Tv
- Thedipaar Fm
- Event
- Arist
- Classified
- Post
- Sell
- Buy
- Advertisement
- Advertisement
- Bulk Sms
- Bulk Call
- Bulk Mail
- Registration