The News Sponsor By
feature-top
feature-top

இலங்கையில் 383 அத்தியாவசிய மருந்துகளில் 92 மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக ஒப்புக்கொண்ட சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, 14 அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த 14 முக்கிய மருந்துகள் மருத்துவ வழங்கல் பிரிவில் கையிருப்பில் இல்லை என்றும், அவை ஆங்காங்கே கிடைக்கின்றன என்றும் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாடு கட்டுப்பாட்டை மீறவில்லை என்றும், அத்தகைய மருந்துகளுக்கு மாற்று மருந்துகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

feature-top
feature-top