The News Sponsor By
feature-top
feature-top

நாட்டில் எதிர்வரும் காலப்பகுதியில் முட்டையொன்றின் விலை 75 ரூபாய் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இரசாயன உரத்துக்கு விதிக்கப்பட்ட தடைக் காரணமாக, நாட்டில் முட்டை மற்றும் கோழிப்பண்ணை தொழில் பாரிய வீழ்ச்சி அடைந்துள்ளதாக தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் கோழிகளின் எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளதால் முட்டை மற்றும் கோழி இறைச்சித் தொழிற்துறையை மீள முன்னோக்கி கொண்டு செல்வதற்கு மேலும் காலம் எடுக்கும் என அந்தச் சபையின் தலைவர் பேராசிரியர் எச்.டபிள்யு சிறில் தெரிவித்துள்ளார்.

வர்த்தக அமைச்சு முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை அமுலாக்குவதற்கு முன்னர், கால்நடைவள அபிவிருத்தி சபையில் எவ்வித ஆலோசனைகளையும் பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக எதிர்வரும் காலப்பகுதியில் முட்டையொன்றின் விலை 75 ரூபாய் வரை அதிகரிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

feature-top
feature-top