The News Sponsor By
feature-top
feature-top

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சில மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முக்கியமாக சிறுநீரக மற்றும் இருதய செயலிழப்பு நோயாளர்களுக்கு பயன்படுத்தும் அத்திய அவசிய மருந்துகள்,உள்ளடங்கலாக 43 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள டெலர் தட்டுப்பாடு காரணமாக முக்கிய மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு அரச மருத்துவமனைகளில் காணப்படுகின்றன தனியார் மருந்தகங்கள் சிலவற்றிலும் முக்கிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

பிரசவ தாய்மார்கள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்கு உட்படுவோருக்கான இரத்தபோக்கிற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள்,சத்திரகிச்சைக்கு பயன்படுத்தப்படும் தையல் நூல், உள்ளிட்ட பல்வேறு பட்டு நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் உள்ளிட் பல்வேறு மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிட்ணி நோயாளர்கள் சிகிச்சைக்காக வந்த நிலையில் அவர்களுக்கு செய்யப்படும் சிகிச்சையின் நேர அளவினை குறைத்துள்ளார்கள்.

முன்னர் 4 மணிநேரமாக இருந்ததாகவும் தற்போது மருத்து தட்டுப்பபாடு காரணமாக 2 மணிநேரத்திற்கு குறைத்துள்ளதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள் வீடு சென்றாலும் தம்மால் எந்த செயற்பாடும் செய்யமுடியாத நிலை காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

feature-top
feature-top