The News Sponsor By
feature-top
feature-top

மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக மட்டக்களப்பில் உள்ள அரசசார்பற்ற பெண்கள் அமைப்புகள் இணைந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை அமர்வின் போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளரை அவமதிக்கும் வகையில் உறுப்பினர் ஒருவர் கருத்த தெரிவித்ததாகவும் அதனைக்கண்டித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் மகளிர் அரசார்பற்ற நிறுவனங்களில் கடமையாற்றும் பெண்கள் மற்றும் மற்றும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சில பெண்களும் இதில் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி செயலாளர் திருமதி சுசிகலா அருள்தாஸ் மற்றும் பெண்கள் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த உறுப்பினருக்கு தமது வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதாகவும் இவ்வாறான உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இதன்போது அதிகார தோரணைகளை பெண்களுக்கு எதிராக திருப்பாதே, பிச்சை கேட்கும் நாட்டில் கச்சை பற்றி கதைப்பதற்கு உங்களுக்கு கதிரை தேவையா போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

feature-top
feature-top