The News Sponsor By
feature-top
feature-top

குழந்தைகளுக்கு வழங்கப்படும் சமபோசா, யஹபோசா, லக்போசா ஆகிய மூன்றிலும் புற்றுநோயை உண்டாக்கும் ஆபத்தான இரசாயன பதார்த்தம் ( அப்ளாடோக்சின்) அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக அடங்கியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது:

இதனை விற்பனை செய்யும் 3 முன்னணி நிறுவனங்களின் 6 இயக்குனர்களையும் நவம்பர் 18ஆம் திகதி கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.

இவர்களால் விற்பனை செய்யப்படும் குறித்த பொருட்களில் உள்ளடங்க வேண்டிய அளவினை விடவும் அதிக அளவு அப்ளாடோக்சின் உள்ளடங்குவதாக கூறி கொத்தட்டுவ பொது சுகாதார பரிசோதகர்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.


சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை பத்தரமுல்லையில் உள்ள அரச பகுப்பாய்வு அலுவலகத்தில் கொடுத்து அதன் அறிக்கையை சுகாதார பரிசோதகர்கள், பெற்றுக்கொண்டுள்ளனர்.


அந்த அறிக்கைக்கமைய, இவற்றில் அப்ளாடோக்சின் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. பொதுவாக உணவில் காணப்படும் அப்ளாடோக்சின் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு இரசாயனமாகும்.


அந்த அறிக்கையின்படி, லக்போஷா என்ற தயாரிப்பில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவை விட 26 மடங்கு அதிக அப்ளாடோக்சின் இருப்பதாக நீதிமன்றத்தில் தகவல் முன்வைக்கப்பட்டுள்ளது.

feature-top
feature-top