The News Sponsor By
feature-top
feature-top

ஆசிய கண்டத்தில் உள்ள அரபு நாடான சவுதி அரேபியா உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டி னாவை அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது. இதற்கு முன்பு 1994-ல் மொராக் கோவை 2-1 என்ற கணக்கிலும், பெல்ஜியத்தை 1-0 என்ற கணக்கிலும், கடந்த உலக கோப்பை யில் எகிப்தை 2-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தி இருந்தது. அர்ஜென்டினாவை வீழ்த்திய மகிழ்ச்சியை சவுதி அரேபிய மக்கள் கொண்டாடினார்கள். நாடு முழுவதும் வெற்றி கொண்டாட்டம் இருந்தது. தலைநகர் ரியாத் முழுவதும் ரசிகர்கள் வெற்றியை கொண்டாடினார்கள்.

நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கார்களில் சென்றவர்கள் கதவுகளை திறந்து சவுதி அரேபியா கொடியை பறக்க விட்டு உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அர்ஜென்டினாவுக்கு எதிராக பெற்ற இந்த வெற்றி காரணமாக சவுதி அரேபியாவுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டது.

feature-top
feature-top