The News Sponsor By
feature-top
feature-top

தென்காசியை சேர்ந்தவர் திருமாறன். இவரது தந்தை ராமசுந்தரம் என்ற பூங்குன்றன், கடந்த 1967 ஆம் ஆண்டு மலேசிய நாட்டில் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். 

அங்கேயே அவர் இறந்ததையடுத்து, அங்கேயே அவருக்கு கல்லறை எழுப்பி விட்டு அவரது மனைவி ராதாபாய் இந்தியா திரும்பியுள்ளார். இவையாவும் 55 வருடங்களுக்கு முன்னரே நடந்திருக்கிறது.

இந்நிலையில், தனது தந்தை இறந்து 55 வருடங்களுக்குப் பிறகு தந்தையின் கல்லறையைத் தேடி தமிழ்நாட்டில் இருந்து மலேசியாவுக்கு திருமாறன் தற்போது சென்றிருக்கிறார். அங்கு கூகுள் மூலம் கர்லிங் பகுதிக்கு சென்ற பூங்குன்றன், தனது தந்தை ஆசிரியராக பணியாற்றிய பள்ளியில் படித்த பழைய மாணவ மாணவியரின் உதவியோடு தந்தையின் கல்லறை கண்டுபிடித்திருக்கிறார்.

தந்தையின் முகத்தை தன் பால்ய வயதில் மட்டுமே கண்டிருந்த மகன் திருமாறன், பளிங்கு கல்லரையை கண்டு ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார்.

feature-top
feature-top