The News Sponsor By
feature-top
feature-top

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் இயங்கிவரும் நகைக்கடை ஒன்றில் வயதான பிச்சைக்காரர் ஒருவர் யாசகம் கேட்டு சென்றுள்ளார். 

அப்போது திடீரென பின்னால் இருந்து ஓடிவந்த நகைக்கடை உரிமையாளர் ராஜா என்பவர் தனது காலணியை எடுத்து யாசகரின் பின் தலையில் தாக்கியதுடன் கேவலமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த கொடூர தாக்குதலின் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகி இருந்தது. 

அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளதுடன், இந்த தாக்குதலுக்கு பொதுமக்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

feature-top
feature-top