The News Sponsor By
feature-top
feature-top

மெரிக்காவின் நியூயார்க்கில் வரலாறு காணாத அளவுக்கு பனி பொழிந்து வருவதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சாலைகளில் 6 அடி உயரத்துக்கு பனி படர்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நியூயார்க்கில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

காலநிலை மாற்றம் காரணமாக உலக நாடுகள் பலவும் மோசமான வானிலை நிகழ்வுகளை சந்தித்து வருகின்றன. வறட்சி, வெள்ளம், புயல், தீவிர பனிப்பொழிவு, மழை ஆகியவற்றை உலக நாடுகள் எதிர் கொண்டுள்ளன. 

எனவே காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

feature-top
feature-top