The News Sponsor By
feature-top
feature-top

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் இன்று மாலை 5.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதியில் 20வது கிலோமீற்றர் பகுதியில் வறுமை காரணமாக மண்வெட்டி பிடி வெட்டுவதற்க்காக காட்டிற்க்கு சென்றவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

தகவலறிந்த பிரதேச வாசிகள் மற்றும் பொலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உழவு இயந்திரம் கொண்டு சென்று உடலத்தினை மீட்டுள்ளார்கள்.

ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பனில் வசித்து வருகின்ற பச்சைமுத்து-புலேந்திரன் (வயது48) என்பவர் உயிரிழந்துள்ளார்.

feature-top
feature-top