The News Sponsor By
feature-top
feature-top

சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் சென்னை பெருநகரில் பேருந்துகளின் மேற்கூரையில் ஏறுவதும், படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்வதும், பயணிகளுக்குத் தொந்தரவு கொடுக்கும் வகையில் பேருந்துக்கு உள்ளேயே ஆட்டம் போடுவதும் அதிகரித்து வருகிறது.

மாணவர்களின் அத்துமீறல்களைப் பொதுமக்கள் வீடியோ மற்றும் புகைப்படமாக எடுத்து தினமும் காவல் துறைக்கு அனுப்பி வருகின்றனர். இதை போலீஸார் சேகரித்து வைத்து தற்போது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர்.

முதல் கட்டமாக பொதுமக்கள்அனுப்பிய வீடியோ, புகைப்படங்கள் மற்றும் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள வீடியோ காட்சிகள் மூலம் எல்லை மீறிய மாணவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியுள்ளது.

feature-top
feature-top